பாக். பிரதமர் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்

121

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட டவிட்டர் பதிவில், நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவர்கள் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்தியா மத சுதந்திரத்தை நசுக்குகுவதாகவும், முஸ்லிம்களை துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

உலக நாடுகள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, இந்தியாவை கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதில் அளித்துள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான், மற்றொரு தேசத்தில் சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பது குறித்து கருத்து தெரிவிப்பது அபத்தம் என தெரிவித்தார்.

பாகிஸ்தானால் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எதிர்கொண்டு வரும் துன்புறுத்தலுக்கு மொத்த உலகமும் சாட்சியாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.