இலங்கையில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்

338

இலங்கை அதிபர் தேர்தலில் 3 பேர் களத்தில் உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில், மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய அதிபருக்கு தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில், இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுராகுமார திசநாயக ஆகிய 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதைதொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். அதிபர் தேர்தலையொட்டி நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.