ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்த அதிபர் புதின் உத்தரவு

73

ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்டம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் ரஷ்டன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.