3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு

47

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா விழாவை தொடங்கி வைக்கும் அவர், பின்னர் தார்வாட்டில் உள்ள இந்திய தகவல்தொழில்நுட்பநிறுவனத்தின்புதிய வளாகத்தை திறந்துவைக்க உள்ளார்.

நாளை பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்கிறார்.