காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஒப்புதல்

252
Advertisement

பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ்.இவரது திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது .பாகுபலி படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தங்களுக்குள் காதல் இல்லை என்று மறுத்தனர்.

இந்நிலையில், பிரபாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் “எனக்கு திருமணம் நிச்சயம் நடக்கும். ஆனால், அது காதல் திருமணமாகவே இருக்கும். திருமணம் எப்போது நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது’’ என்று சொல்லியுள்ளார்.