ஜப்பானில் ஏற்பட்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…பொதுமக்கள் அதிர்ச்சி

433
Advertisement

ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது

ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.