சிலையாக நித்தியானந்தா ? கைலாசாவில் திடீர் பூஜை

47
Advertisement

சில நாட்களுக்கு முன், நித்யானந்தா  உடல்நிலை மோசமடைந்து விட்டது எனவும் உடனடி சிகிச்சை பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் உள்ளார்.ஆதலால் இந்திய அரசுநாட்டிற்குள் வர அனுமதி வழங்கவேண்டும் என கைலாசாவில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக  செய்திகள் வெளியாகின.

இதைதொடர்ந்து,தன் உடல்நலம் நன்றாக உள்ளது எனவும்,விரைவாக குணமடைந்து வருவேன் என நித்தி பேசும் வீடியோக்கள் இணையத்தில் உலா வந்தன.இந்நிலையில்,நித்தி வாழ்ந்துவரும் கைலாசாவில் பூஜை ஒன்று நடைபெற்றுள்ளது.

Advertisement

இதில் சுவாரசியம் என என்றால்,நித்தியானந்தா தோற்றத்தை பிரதிபலிக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்து ,அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது போல புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இது குறித்து நித்தியானந்தாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், சித்திரை நட்சித்திர உட்சவம் என்பதால் இந்த பூஜை செய்யப்பட்டுள்ளது. சித்ரா நட்சித்திரம் என்பது பூமியில் ஸ்ரீ பரம்மசமாரின் செயல்களை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை.அவர்தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும்.

மேலும் இந்த பூஜை இங்குள்ள நித்யனந்தேஸ்வர ஹிந்து கோவில் என்ற புதிய கோவிலில் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக நித்தி குறித்து பல தகவல்கள் வெளிவந்தாலும்,அவரின் உண்மையான நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது.