புதுச்சேரியில் தொற்று பாதிப்பு எப்படி உள்ளது?

corona
Advertisement

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 83 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், மாஹேயில் 36 பேருக்கும் என மொத்தம் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.