தன் உயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய மனித கடவுள்கள்

402
Advertisement

சிலர் விலங்குகளின் உயிரை  இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள்.வீடுகளில் வளர்க்கக்கூடிய விலங்குகளை துன்புறுத்துவது,சில நேரங்களில் காட்டு விலங்குகளை கூட துன்புறுத்தும் கூட்டம் உண்டு.

அதேவேளையில்,மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் இடையே உள்ள பாச பிணைப்பை வெளிப்படுத்தும் தருணம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.பல விலங்குகள் செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகிறது.செல்லப்பிராணி என்றால்,முதலில் நம் நினைவுக்கு வருவது ‘நாய்கள்’

இந்நிலையில்,கொலம்பிய  நாட்டில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், அந்நாட்டு காற்றாற்று வெள்ளத்தில் நாய் ஒன்று அடித்துச்செல்கிறது,இதை கவனித்த காவலர்கள் அந்த நாயை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

சற்று தடுமாறினாள் தண்ணீரில் அடித்துசென்றுவிடுவோம் என்பதை தெரிந்தும் காவலர் ஒருவர் அந்த தண்ணீரில் இறங்கி வெகு நேரமாக அடுத்துவரும் வரும் நாயை,தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி,மேலே நிற்கும் மற்றொரு காவலரிடம் கொடுக்கிகிறார்.

வெகு நேரம் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய அந்த நாய் , உறைந்த நிலையில் உள்ளது.சற்றும்  தயங்காமல் நாயின் வாயில்,தன் வாயை வைத்து சுவாசம் வரவைக்க முயற்சி செய்கிறார் காவலர் ஒருவர்.பின்பு சில நிமிட முயற்சிக்கு பிறகு.நாய் காப்பாற்றப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி   வருகிறது.