வீட்டில இருந்த பைக்குக்கு ரோட்ல ரூ.100 FINE  போட்ட போலீஸ்! எப்புட்றா?

32
Advertisement

மாசக் கடைசியில வித்தியாசமான காரணங்களுக்காக traffic போலீஸ் கிட்ட மாட்டி fine கட்டுறது நம்ம மக்களுக்கு பழகிப் போன விஷயம்னே சொல்லலாம்.

ஆனா, பைக்கை வெளியவே எடுத்துட்டு போகாதப்ப, வண்டி ஓட்டும் போது ஹெல்மட் போடலன்னு அபராதம் விதிச்சா எப்படி இருக்கும்?

அப்படித் தான் ஒரு சம்பவம் கோயம்புத்தூர்ல நடந்துருக்கு. TN40Q4878 பைக் நம்பரோட, ஹெல்மட் போடாம பல்சர் ஓட்டிட்டு போன நபரப் பாத்த போலீஸ், அவரோட fancy font நம்பர் plateஎ பாத்து confuse ஆகி, TN 40R4878 நம்பர் வச்சு இருக்குறவருக்கு 100 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி இருக்காங்க.

இந்த ஆதங்கத்தை இன்ஸ்டாகிராம்லயாச்சு சொல்லுவோமேன்னு அவர் போஸ்ட் போட, எனக்கும் இப்படி நடந்துருக்கு அப்படி நடந்துருக்குன்னு ஏகப்பட்ட கமெண்ட்ஸோட இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துட்டு இருக்கு.