குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

181

மதுரவாயலில், குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் ஆற்காடு சாலையில் எஸ் வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் கட்டிடத்தின் 2வது தளத்தில் குடிபோதையில் இருந்த நபர்கள், ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்துள்ளனர்.

அவர்கள் போதையில் தள்ளாடியதால், பணம் எடுத்து தருவதாக ஏடிஎம் காவலாளி சரவணன்  கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், காவலாளி சரவணனை கொடூரமாக தாக்கியுள்ளனர். சரவணன் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.