ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

336

வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவில் கடந்த 2011 ஆண்டு லூசி என்ற நாய் சேர்க்கப்பட்டது.

அன்றிலிருந்து காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி வந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு மாநில அளவிலான துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் இரண்டாம் பரிசாக சில்வர் பதக்கத்தை பெற்று லூசி பாராட்டை பெற்றது.

சிறப்பாக பணியாற்றி வந்த லூசி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றது.

லூசியை கௌரவிக்கும் முறையில் சிறப்பாக பணி நிறைவு விழா மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மோப்பநாய் படைப் பிரிவின் சார்பில் லூசிக்கு பிரிவு உபச்சார விழாவாக கேக் வெட்டியும், சால்வை அணிவித்தும் சிறப்பான முறையில் காவல்துறையினர் கொண்டாடினர்.