விமானத்தில் தன் மனைவியை நெகிழச்செய்த விமானி

440
Advertisement

கணவன் மனைவி பாச பிணைப்பை வெளிப்படுத்தும் சில சுவாரசியமான வீடியோகள் இணையத்தில் உலாவருகிறது. இந்நிலையில் விமானி ஒருவரின் மனைவி விமானத்தில் அமர்ந்தபடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடன், “உங்கள் மனைவியாக இருப்பது எனது மிகப்பெரிய ஆசீர்வாதம். இவருக்கு தகுதியானவளாக இருக்கு நான் என் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் மனைவியாக இருப்பது மிகப்பெரிய பாக்கியம். என உருக்கமான வரிகளால் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த வீடியோவில், மனைவி ஜஹ்ரா விமானத்தில் ஏறும்போது கணவனான கேப்டன் அல்னீஸ் விரானிக்கு   கை அசைகிறார்.பதிலுக்கு  விமானிகள் அறையின் ஜன்னல் வழியாக  விரானி கை அசைத்து காட்டுகிறார். இதனை அடுத்து விமானத்தில் தனது இருக்கையில் ஜஹ்ரா அமர்ந்தார்.

அப்போது கணவர் விமானத்தின் கேப்டன் அல்னீஸ் விரானி திடீரென்று மைக் வாயிலாக பயணிகளிடம் பேச ஆரம்பித்தார். அதில், ‘இந்த விமானத்தில் உங்களுடன் ஒரு சிறப்பு பயணி இருக்கிறார். எனது மனைவியை இந்த விமானத்தில் மும்பைக்கு அழைத்து செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது மற்றவர்களுக்கும் ஒரு சிறிய விஷயம். ஆனால் எனக்கு நிறைய அர்த்தம் உள்ள ஒன்று. விமானத்தில் உள்ள உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என  உருக்கமாக கூறினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.