ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு – தனி விமானம் மூலம் டெல்லி வந்த பிரதமர்

241

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து பிரதமர் மோடியின் இரண்டு நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.

இதையடுத்து அவர் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

இந்நிலையில் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தார்.