பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

pm
Advertisement

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் இன்று பகல் ஒரு மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதா மற்றும் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.