பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

338

ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்தகங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 735 ஆக உள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனிடையே மே மாதத்தில் முதல் முறையாக மக்கள் மருந்தகங்களில், மருந்துகளின் விற்பனை 100 கோடியைத் தாண்டியுள்ளது.