“தமிழ்நாட்டுக்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாதது”

51

ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து INS அடையாறு விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

பின்னர் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Advertisement

பின்னர் தனிவிமானம் மூலம் டெல்லி சென்றார்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாதது என்றும் நன்றி தமிழ்நாடு என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.