கடல்சார் பொருள் வர்த்தகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்ய திட்டம்

268

கொச்சி, கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ளது என்றும்,  5 ஆண்டுகளுக்குள் அதை இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறினார். 

மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன்வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜரோப்பிய யூனியனுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ம் தேதி தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கூறினார்.