4000 அடி உயரத்தில் இருந்த விமானம், திடீரென பாராசூட் இல்லாமல் குதித்த விமானி!

152
Advertisement

சில நேரங்களில் எதிர்ப்பாரதவிதம் விமான  விபத்துக்கள்  நிகழ்ந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக பல உயிர்களையும்  இழக்கநேரிடும்.இந்நிலையில்,  அமெரிக்காவின் வட கரோலினாவில்  23 வயதான Charles Hugh Crooks என்ற விமானி ஒரு சிறிய ரக விமானத்தை ஓடிக்கொண்டு இருந்த போது,4000 அடி உயரத்தில் இருந்த பாராசூட் இல்லாமல் குதித்ததில் உயிரிழந்தார்.

அவரின் உடல் சிதைந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இரு விமானிகளால் ஓட்டிச்செல்லப்பட்ட பயணிகள் இல்லாத அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் அவர் குத்துருக்கலாம் என கூறப்படுகிறது.இருப்பினும், விமானி அங்கிருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது நிரூபிக்கப்படவில்லை.

Advertisement

விமானி குதித்த பிறகுதான் விமானத்தில் இருந்த துணை விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.