பெட்ரோல், டீசல் விலையேற்றம்- ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதாவி கேள்வி

187

2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதாவின் கேள்விக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகவ் சாதா, இது சாமானியர்களை கொள்ளையடிக்கும் அரசின் தெளிவான வாக்குமூலம் என்று விமர்சித்துள்ளார்.