மாநில அரசால் முடிந்தது ஏன் மத்திய அரசால் முடியாது?

petrol-price
Advertisement

பெட்ரோல், டீசல் விலையை தமிழக முதலமைச்சரால் குறைக்க முடியும் என்றால், மத்திய அரசால் ஏன் குறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசை போல மத்திய அரசும் கலால் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறையும் என்றார்.

ஆனால் வரியை குறைக்காமல் காங்கிரஸ் மீது மத்திய அரசு பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கான இடங்களை கேட்டுப் பெறுவோம் என்றும், உள்ளாட்சி தேர்தலில் கிராம அளவில் போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement