“என் பந்தை துளைத்துவிட்டேன்”தந்தையிடம் ஆறுதல் கேட்ட நாய்

211
Advertisement

குழந்தைகளை போல விளையாடுவது,கோபித்துக்கொள்வது,கோபம்கொள்வது என மனிதனை போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிவை  நாய்கள்.செல்லப்பிராணிகள் பட்டியலில்  முதல் இடத்திலும் உள்ளது நாய்கள் தான்.

தன் உரிமையாளர்களிடம் நாய்களின்  பிணைப்பு சில நேரங்களில் வியப்பை ஏற்படுத்தும்.அது போன்ற பல வீடியோகள் இணையத்தில் உலா வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு வீடியோ இன்ஸ்டாவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதில், கோல்டன் ரெட்ரீவரான எல்டன் என்ற பெயரிடப்பட்ட நாய்,தன் உரிமையாளருடன் பூங்காவிற்கு விளையாடச் சென்றதாகவும்.அங்கு விளையாடிக்கொண்டு இருந்தபோது,தன் பந்தை தொலைத்துவிட்டதாகவும்.இதனால் மிகிந்த  வருத்தத்தில் தன் தந்தையின் அரவணைப்பில் சோகத்துடன் இருப்பது போல உள்ளது. 

Advertisement

“அந்த சிறிய பாதம்” என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.அத்துடன், “இன்று எல்டன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது பந்தை  துளைத்துவிட்டான் . வீட்டிற்கு வந்த பிறகுதான் தன் பந்து இல்லை என்பதை உணர்ந்தான்.மற்றொரு  நாய் அதைக் கண்டுபிடிச்சு ரொம்ப சந்தோஷப்படும்னு சொல்ல முயற்சி பண்ணோம்! ஆனால் அவனுக்கு  இன்னும் ஆறுதலுக்காக அப்பாவிடமிருந்து சில அரவணைப்புகள் தேவைப்பட்டன, ”என்று அது கூறுகிறது.இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயங்களை உருக்கச்செய்துள்ளது.