பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை….!

49
Advertisement

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் ஆகியவற்றைக் கற்றுத் தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.


வருகின்ற ஜூன் மாதம் பள்ளி ஆரம்பித்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்து 13வது கல்வி ஆண்டு தொடங்குகிறது. அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181இன் படி பணி நிரந்தரம் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. மே மாதம் சம்பளமும் வழங்கவில்லை. 10,000 ரூபாய் குறைந்த சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தவிக்கின்றனர். தொகுப்பூதியம் முறையை ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கும் பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசின் பணப் பலன்கள் கிடைக்கும்.