காற்றுடன் கன மழை

531

பெரம்பலூரில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

பெரம்பலூர் -அரியலூர் செல்லும் சாலையில் பேரளி அருகே பயன்பாட்டிற்கு வராத டோல் பூத்தின் மேற்கூரைகள் பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டன.

இதில் நல்வாய்ப்பாக யாரும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மரங்களும் முறிந்து விழுந்தன.

திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.