மின்கம்பம் அருகே கால்வாய் அமையப்பட்டுள்ளதால் அச்சத்தில் உள்ள மக்கள்

52

சென்னை தாம்பரம் அருகே மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சேலையூர் மணிமேகலை தெருவில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலையோரம் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் நீர் செல்ல முடியாத வகையில், கால்வாயின் நடுவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதனை கண்டுகொள்ளாமல், ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக, கால்வாய் அமைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.