புதிய வைரஸ் கண்டுபுடிப்பு அச்சத்தில் மக்கள்

247

மனித குலத்திற்கு மீண்டும் அச்சுறுத்தலை தரும் வகையில் கோஸ்டா 2 எனும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டரஸ் அதானம், இதனை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் உலக அளவில் மக்களிடையே புதிய பீதி ஏற்பட்டுள்ளது.