மீண்டும் நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்

228

சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது. நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.