டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி

43

கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 74 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு, அக்டோபர் மாதத்தில் பெய்த 2வது அதிக மழைப்பொழிவு இது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியில் காற்று மாசு குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே 55,56 ஆக இருந்த குறியீட்டு எண் 48ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியை அடுத்த காசியாபாத், குருகிராம், கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களும் தூய்மையான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன.

Advertisement