பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ளது. மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் ஒரு சேர குரல் கொடுக்கின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை முடக்கப்படுகின்றன.
இந்நிலையில் 4வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் கூடியது. அப்போது மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு முன் சூழ்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், முழக்கம் எழுப்பினர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, அவையை முடக்குவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என கூறி, தனது அதிருப்தியை தெரிவித்தார்.