பெகாசஸ் விவகாரம் – அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

spyware
Advertisement

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்குகள் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படு்ம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “பெகாசஸ் ஸ்பைவேர்” ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கடந்த 8 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர் ராம், அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் முதல்வாரத்தில் அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Advertisement