நாடாளுமன்ற வளாகம் முன் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

230
spyware
Advertisement

பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகம் முன் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகம் முன், தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சிவசேனா எம்.பிக்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொலைபேசி ஒட்டுக்கேட்க்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.