தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவிப்பு

173

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல, மக்கள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

எனவே ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த அதிகபட்ச கட்டணத்தை விட 10 முதல் 22 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.