கல்லீரலை காலி செய்யும் பாராசிட்டமால்! மக்களே உஷார்..

184
Advertisement

பருவகால மாற்றம் காரணமாக அதிகரித்துள்ள நோய்த் தொற்று, வேகமெடுக்கும் கொரோனா, விடாது துரத்தும் Influenza என மக்கள் பாராசிட்டமாலை நோக்கி படையெடுக்க பல காரணங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதிகமான பாராசிட்டமால் பயன்பாட்டை பற்றிய தகவல்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பான்மை மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. இந்நிலையில், கோவை மருத்துவமனையில் கல்லீரல் செயலிழந்தவர்களுக்கான பிரத்யேக அதி தீவிர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் நல்லா பழனிச்சாமி, பாராசிட்டமால் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் அதிகரிக்கிறது எனவும், குறிப்பாக குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

10க்கும் மேற்பட்ட பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மற்றும் Rat Killer Poison உட்கொண்டால் கல்லீரல் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளார். பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை 4 முதல் 6 மணி நேர இடைவேளை விட்டு போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.