“குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்”

137

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று  நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம், வேலை வாய்ப்பு குறித்து அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். 

Advertisement

மேலும், நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி ஊக்கத்தொகை ஆகியவை வழங்குவதற்கான விபரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும்  அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார்.