செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

123

செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் முறையிட உள்ளதாகவும் கூறியுள்ளது

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளதை இந்தியா கடுமையாக விமர்சித்து உள்ளது. இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவு ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ளார். மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை பாகிஸ்தான் அரசியல் ஆக்கி உள்ளதாகவும், பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்த பிறகு இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது என்றும், இனியும் அதேபோன்று தான் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement