வாகனத்தை பறிகொடுத்தவருக்கு “பாகிஸ்தான் காவலர்கள் கொடுத்த -ஷாக்”

274
Advertisement

பொதுவா, வாகனங்கள் தொலைந்து விட்டால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம்.காவல்துறையும் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஒருவர்  தன் இருசக்கர வாகனத்தை காணவில்லை என எட்டு ஆண்டுகளுக்கு முன் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.ஆண்டுகளும் கடந்து சென்று விட்டது.வாகனம் கிடைக்கவில்லை.

தன் இருசக்கர வாகனம் காணாமல் போனதை மறந்து,அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த அவருக்கு  சமீபத்தில்  ஈ-சலான் ஒன்று வந்துள்ளது.அதை கண்டு  திகைத்துபோனார் அவர்.

“என்னா டா நம்ப வண்டி  காணாமபோய் எட்டு வருஷம் ஆச்சு” இப்போ சலான் வந்துருக்குனு பாத்தா, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு.அந்த சலான் , போக்குவரத்துக்கு விதிகளை மீறியதாக குறிப்பிட்டு ,வாகனம் எங்கு எந்த இடத்தில் விதிகள் மீறப்பட்டது என புகைப்படத்துடன் அனுப்பியுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் இருந்தது இவரின் வாகனம் தான்,அனால் அந்த வாகனத்தை ஓட்டிச்செல்வது காவலர் ஒருவர்.இதை கண்டு திகைத்து போனார் அந்த நபர்.இது நம்ப லிஸ்டலையே இல்லையே என நமக்கே தோணும் போது , பாவம்.. அவரு என்ன நினைத்திருப்பார்?

இதையடுத்து, தன் வாகனத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார் அந்த நபர்.இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், அங்கு அனுமதி இல்லாமல் இதுபோன்று மின் சலான்களை அனுப்பக்கூடாது, போக்குவரத்துக் விதிமீறல்களுக்கு நிகழ்விடத்திலையே அபராதம் விதிக்கவேண்டும் என கூறப்படுகிறது.