மழையில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்

259

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு திறந்த வெளியில் இயங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலை ஓரம் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

Advertisement

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.