அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை – ப.சிதம்பரம்

350

டெல்லியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்த ப.சிதம்பரம், ஜனநாய நாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டரீதியாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறதா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதும், சம்மன் அனுப்பவதும் சட்டவிதிமுறைகளுக்கு எதிரானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.