“நமது குப்பை நமது பொறுப்பு”

941

தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணியை, மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அதிகாரி நமச்சிவாயம் உள்ளிட்டோர் மாணவர்களிடம் உரையாற்றினர்.

பின்னர், மாணவ-மாணவிகள் வழிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.