டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

283

அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றும், தொடர்ந்து பருவமழை குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பருவமழை தொடங்க அதிக நேரம் உள்ளதால், கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

இந்த வெப்பம் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என்பதால், மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.