இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது என்ற வரிசையில், தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்தபோது, அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம் என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புகுத்துவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட ஒபிஎஸ், இதன்மூலம் அரசுப் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிவகுத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் LKG, UKG வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.