பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி OPS உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

375

அதிமுக-வின் பொதுக்குழு ஜூலை-11 ம்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஜூலை-11 ம்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு நேற்றுமாலை அழைப்பிதழ் வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, 15 நாட்களுக்கு முன் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.