OPS விடுத்துள்ள 3 எச்சரிக்கைகள்

285

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள மூன்று எச்சரிக்கைகள், அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் பகிரங்கமாக அளித்த பேட்டியில், பிரதமர் மோடி சொல்லி தான், அதிகாரமே இல்லாத துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறியிருப்பதன் மூலம், அதிமுக விவகாரத்தில் பாஜக மேலிடத்தின் தலையீடு இருந்ததையும், பிரதமர் மோடியே தன்னை சமாதானப்படுத்த முனைந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதன்மூலம், மோடியின் ஆதரவை தம்மால் மீண்டும் பெறமுடியும் என்கிற முதலாவது எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

அடுத்து, சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் தேர்வு செய்ததாகக்கூறி, கட்சியின் ரகசியங்கள் இனி கசியக்கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

மூன்றாவதாக, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்படுத்தியதற்குத்தான் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற சட்டச்சிக்கலை ஒபிஎஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தனது ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் நிலை வந்தால், தேர்தல் ஆணையம்வரை சென்று அதிமுக முடக்கமுடியும் என்கிற எச்சரிக்கை அது.

இதனால், எடப்பாடி தரப்பு வெலவெலத்து போயிருக்கிறது.