கடலூர் மாவட்டத்தில் காவலர் ஒருவரே கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு இன்று அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைத்து காவல்நிலையங்களிலும் கந்துவட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டு்ம் என்று டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட எஸ்.பி.களும் கந்து வட்டி புகார்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துவதை கண்காணிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கந்துவட்டி, ஆள் கடத்தல், நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து “ஆபரேஷன் கந்துவட்டி” மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.