Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு

257

ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆன்-லைன் விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அப்பாவி மக்களுக்கு ஏற்படும்  பண இழப்பு, உயிரிழப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவி்த்துள்ளார்.

Advertisement

அந்த குழுவில், கூடுதல் டிஜிபி,வினித் தேவ் வங்கடே,  ஐஐடி சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர்  2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  அறிக்கையின் அடிப்படையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.