நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்…

43
Advertisement

நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர். ஹெலிகாப்டர் சங்குவாசபா மாவட்டத்தில் உள்ள பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார். கேப்டன் சுரேந்திர பவுடல், பணியாளர்கள் ஷெரிங் போட், மனோஜ் தாபா மற்றும் நேபாள மின்சார ஆணைய ஊழியர் பிக்ரம் சங்கர் ஆகிய நால்வரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.