தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்…

183
Advertisement

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் படுகொலை வழக்கு…..

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் பதுங்கியிருந்த மேலும் ஒருவர் கைது….

இவர் பணியில் இருந்தபோது திடீரென புகுந்த 2 மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். கழுத்து, தலை மற்றும் கையில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த லூர்து பிரான்சிஸ், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணல் கொள்ளைக்கு எதிராக VAO லூர்து பிரான்சிஸ் கடந்த 13ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் காரணமாகவே லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நெல்லை தாழையூத்தில் பதுங்கி இருந்த மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடியில், கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர், நேற்று இரண்டு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து திருவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.