என் பிறந்த நாளுக்கு எதுவும் செய்யல… பாய் பிரண்ட்மீது புகார் கூறிய பெண்

213
Advertisement

”என் பிறந்த நாளுக்கு பாய் பிரண்ட் எதுவும் செய்யவில்லை.
பிறந்த நாளைக் கொண்டாட எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று
இளம்பெண் கூறியுள்ளார்.

அந்த இளம்பெண் வேடிக்கையாகத் தனது ட்டுவிட்டர் பதிவில்
இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள வீடியோ வைரலானது.

அந்தப் பதிவில், ”பெண்கள் எளிமையானவர்கள். அவர்களை
சிக்கலானவர்கள் ஆக்குவது ஆண்கள்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப்
பார்வையிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில், ”என் பிறந்த நாள் எனது ஆண் நண்பருக்கு
முக்கியமான நாளாகத் தெரியவில்லை போலும். நான் சிறப்பான
தோழி என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்” என்றும்,
”எனது எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

”எளிமையான கேக்கும் உணவும் என் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப்
போதாது.. என்னுடைய பிறந்த நாள் வெற்றிகரமான நாள் ஆவதற்கு
நான் எப்படி முக்கியத்துவம் கொடுப்பேனோ அப்படியே
என் பாய் பிரண்டும் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும்.

சென்ற பிறந்த நாளுக்கு என் பாய் பிரண்டு கேக் கொடுத்ததுடன்
லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்கும் அழைத்துச் சென்றான்.

இந்த முறை என்னை ஈர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது,
எனக்கென்று எதுவும் சிறப்பாக செய்யத் தேவையில்லை என்றும்,
அதேசமயம் எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறவிலையெனில் எப்படி நடந்துகொள்வேன்”
என்பதையும் அந்தப் பெண் கோபமாகக் கூறியுள்ளார்.

அந்தப் பெண் சொன்னதுபடியே அவளது பாய் பிரண்ட் அவளுக்கு
எதுவும் செய்யவில்லை. இதனால் வருத்தப்பட்டு வெளியிட்ட
வீடியோதான் வைரலானது.