2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி

284

கேரள மாநிலத்தில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதித்த கண்டறியப்பட்டுள்ளது.

நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.

இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுவதால், விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிச் செல்லும் 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நோய் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதார கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.