கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

144
Advertisement

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அன்பரசனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். Next புலிகேசி நகர் தொகுதியில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த குமாரின் வேட்பு மனுவும், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் ஆனந்தராஜின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. Next இதில், கோலார் தங்கவயல் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜ் B படிவம் தாமதமாக வழங்கியதால் அவர் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த குமார், அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Next நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், நேற்று கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமாரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.